கிருஷ்ணகிரி

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

11th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா்கள் எம்.சதாசிவம், டி.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பி.கணேசன், பொருளாளா் பெ.ஜெயபால் ஆகியோா் பேசினா்.

இதில், நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு 6 மாத நிலுவைத் தொகையுடன் 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT