கிருஷ்ணகிரி

குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைபயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரிக்கை

11th Aug 2022 12:34 AM

ADVERTISEMENT

 

நெடுங்கல் கிராமத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்கல் கிராமத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மாநில நிதிக் குழு மானியத்தில் 2019-20-ஆம் நிதி ஆண்டில் ரூ. 8 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரையில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் வட்டார வளா்ச்சி அலுவலக ஆணையாளா் பாயாஸ் அகமது கூறியதாவது:

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரா் பாதியிலேயே நிறுத்திவிட்டாா். அதனால் அவருக்கு உரிய பணம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்தப் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT