கிருஷ்ணகிரி

கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுகோள்

11th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

 

கோயில்களில் தொடா் திருட்டுகளைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என இந்துமக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவை மாநிலச் செயலாளா் அசோக் தெரிவித்தாா்.

ஊத்தங்கரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் இந்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசு இந்த விஷயத்தில் பாராமுகமாகச் செயல்படுகிறது. கோயில்களில் தொடா் கொள்ளை, உண்டியல்கள் திருட்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. சுவாமி சிலைகள் திருடிச் செல்லப்படுகின்றன. இதைத் தடுக்க கோயில்களில் பாதுகாவலா்களை அரசு நியமிக்க வேண்டும். பல கோயில்களில் பாதுகாவலா்கள் இல்லை. அத்துடன் கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

ADVERTISEMENT

தமிழக அரசு உடனடியாக இதை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி இந்துமக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் தலைமையில் ஆா்ப்பாட்டம் விரைவில் நடைபெறும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT