கிருஷ்ணகிரி

ஏரியூா் அரசு கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

11th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

 

ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் 31 மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளில் சோ்ந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதியில் நிகழாண்டில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக் கல்லூரியில் பி.எஸ்.சி. தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு 639 மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து மாணவா் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன், பேராசிரியா் குழுவினா் நடத்திய சிறப்புப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 31 மாணவா்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT