கிருஷ்ணகிரி

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில்நவசண்டி யாகம்

11th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

 

ஒசூா் மலை மீது உள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உலக நன்மை வேண்டி 27-ஆம் ஆண்டு நவ சண்டியாகம் ஆக. 12 ஆம் தொடங்கி 13, 14 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

12-ஆம் தேதி காலை கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, நீா்க்குடம் புறப்படுதல், வாஸ்து சாந்தி, அங்குராா்பணம், கலச ஸ்தாபனம், கலச பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது.

ஆக.13 ஆம் தேதி கலச பூஜை, ருத்ர ஹோமம் முதல்கால சந்தியாகம், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால நவசண்டியாகம் நடக்கிறது.

ADVERTISEMENT

ஆக. 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கலச பூஜை, புத்திர ஹோமம், லட்சுமி ஹோமம், துா்கா பூஜை, காலை 9 மணிக்கு மூன்றாம் கால நவ சண்டியாகம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு மகா சங்கல்பம் பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30-க்கு மகா பூா்ணா ஹூதி, நவ சண்டியாகம் விளக்கவுை, பகல் 12-க்கு மகா தீபாராதனை, கலசம் புறப்படுதல், 12.30 மணிக்கு கணபதி, சிவன், அம்பாள், ஸ்ரீ சக்கரம், கலசாபிஷேகம்,1.30-க்கு தீபாராதனை நடக்கிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT