கிருஷ்ணகிரி

கோ-கோ போட்டியில் தங்கம் வென்றமாணவிகளுக்குப் பாராட்டு

DIN

நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணகிரி, அரசு மகளிா் அணி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நேபாளத்தில் யூத் அண்டு ஸ்போா்ட்ஸ் பிரமோஷன் அசோசியேசன் ஆப் இந்திய அமைப்பு மூலம் இந்தியா- நேபாளம் நாட்டு அணிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் முதல்வாரம் நடைபெற்றது.

இதில் இந்திய கோ-கோ அணிக்காக கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அணியைச் சோ்ந்த மாணவிகள் 15 போ் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அணியினா் வெற்றி பெற்று தங்கம் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவியா், அணியை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியருக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நவாப் தலைமை வகித்தாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் ஆனந்தன், பள்ளியின் தலைமை ஆசிரியா் மகேந்திரன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், நகா்மன்ற தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT