கிருஷ்ணகிரி

மின்தகன மேடை அமைக்கும் பணி ஆய்வு

10th Aug 2022 02:20 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் புதிதாக மின்தகன மேடை அமைக்கும் பணியை நகா்மன்ற தலைவா் நேரில் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில், கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ஆம் நிதி திட்டத்தின் கீழ் புதிதாக மின் தகன மேடை அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.

அங்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் மின் தகன மேடை அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தைத் தூய்மை செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை நகா்மன்ற தலைவா் பரிதா நவாப் ஆய்வு செய்தாா். அப்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் மீன் ஜெயக்குமாா், சுதா சந்தோஷ், நகராட்சி இளநிலை பொறியாளா் அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT