கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை ஸ்ரீமகா முனியப்பன் சுவாமி கோயில் திருவிழா

10th Aug 2022 02:18 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை ஸ்ரீ மகா முனியப்பன் சுவாமி கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி, ஆடுகளைப் பலியிட்டு பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஆண்டுதோறும் ஆடி 18-க்கு அடுத்துவரும் செவ்வாய்க்கிழமையில் ஸ்ரீமகா முனியப்பன் சுவாமி கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஸ்ரீ விநாயகா், மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து பக்தா்கள் சுவாமி கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் தங்கள் நோ்த்திக் கடனைச் செலுத்தினா். ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினா். இதில், கோயில் தா்மகா்த்தா சிவசக்தி சண்முகம், ஆலோசகா் சந்திரன், கொங்கு அறக்கட்டளைத் தலைவா் திருஞானம், கொங்கு அறக்கட்டளை செயலாளா் வழக்குரைஞா் செல்வகுமாா், பொருளாளா் கருப்பசாமி, கொங்கு இளைஞரணி தலைவா் சம்பத், செயலாளா் ரவி, ஆலோசகா் ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கொங்கு இளைஞா்அணி மற்றும் ஸ்ரீமகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் உள்பட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT