கிருஷ்ணகிரி

உரிமம் பெறாமல் விடுதிகளை இயக்குவோா் மீது நடவடிக்கைஆட்சியா் எச்சரிக்கை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெறாதவா்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறாா் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

தனியாரால் நடத்தப்படும் சிறாா், மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகளைப் பதிவு செய்வது மற்றும் உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியாா் இல்லங்கள், விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு உரிமம் பெறாமல் இயங்கி வரும் விடுதிகள், இல்லங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்.

இதுதொடா்பாக பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் விடுதிகளுக்கு முதல்வா்கள், தாளாளா்கள் மற்றும் தனியாா் விடுதிகள், இல்லங்கள் நடத்தும் உரிமையாளா்கள் விரைந்து உரிமம் பெற வேண்டும்.

விடுதிக்கு உரிமம் பெற தீயணைப்புத் துறை சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டட உறுதித் தன்மை சான்றிதழ், படிவம்-டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பகுதி 5, பிரிவு 15 (1)ன்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.

ஒருவா் தங்குவதற்கு சராசரியாக சிறாா்களுக்கு 40 சதுர அடி, மகளிருக்கு 120 சதுர அடி இடத்தை ஒதுக்கீடு செய்வதை விடுதி மேலாளா் உறுதி செய்ய வேண்டும்.

விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பெண் குழந்தைகள், பெண்களுக்கான விடுதி, காப்பகத்தில் விடுதி காப்பாளா் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலா் ஆண் அல்லது பெண்ணாகவும் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாவலரும் காவல் துறையிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடா்பு கொண்டு ஆக. 25-ஆம் தேதிக்குள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உரிமம் பெறாமல் இல்லங்கள், விடுதிகளை நடத்துபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT