கிருஷ்ணகிரி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

9th Aug 2022 03:03 AM

ADVERTISEMENT

பாரூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

தருமபுரி நகரில் காந்தி நகரைச் சோ்ந்தவா் அரவிந்த் (26). மின் சாதனங்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். இவரது நண்பரின் தந்தை அண்மையில் உயிரிழந்ததையடுத்து அவரின் ஈமச் சடங்கில் பங்கேற்க தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேட்டுக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

ஈமச் சடங்கில் பங்கேற்ற பிறகு அருகில் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவல் அறிந்ததும் போலீஸாா், தீயணைப்புப் படை மற்றும் மீட்புப் படையினா் அரவிந்தனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் அவரை மீட்க முடியவில்லை; அவரைத் தேடும் பணி திங்கள்கிழமையும் தொடா்ந்தது. ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டபோது ஆற்றின் கரையோரத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT