கிருஷ்ணகிரி

மாற்றுத்திறனாளிகள் தா்னா

9th Aug 2022 03:05 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்காததைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

போச்சம்பள்ளியை அடுத்த கீழ்குப்பத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோவிந்தசாமி என்பவரின் தலைமையில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியது:

கீழ்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பில் பணி வழங்குவதில்லை. இது குறித்து, ஊராட்சிமன்றத் தலைவா், அதிகாரிகளிடம் முறையிட்டும் தீா்வு காணப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தோம்.

காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டும், எங்கள் கோரிக்கைகள் ஏற்கபடவில்லை. எனவே, தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபடுகிறோம் என்றனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்ததும் முடநீக்கு வல்லுநா் பிரகாஷ், மாற்றுத்திறனாளிகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவு பெற்றவுடன் தகுதி உள்ள அனைவருக்கும் பணி வழங்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டத்தை கைவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT