கிருஷ்ணகிரி

மருத்துவ முகாம்: மு.தம்பிதுரை எம்.பி. தொடக்கி வைத்தாா்

9th Aug 2022 03:05 AM

ADVERTISEMENT

ஒசூா், எம்.ஜி.ஆா்.நகரில் உள்ள செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒசூா் சிப்காட் ரோட்டரி கிளப் ஆகியவை சாா்பில் மதகொண்டப்பள்ளியில் உள்ள மாதிரி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு. தம்பிதுரை எம்.பி. கலந்துகொண்டு முகாமைத் துவக்கிவைத்தாா். முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி இயக்குநா் டாக்டா் லாசியா, மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளிச் செயலாளா் நேரு, ரோட்டரி கிளப் மாவட்டத் தலைவா் சரவணன், ரோட்டரி சங்கத் துணை ஆளுநா் ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் 700 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன; 200 போ் இலவச சிகிச்சைக்காக செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இனிவரும் காலங்களில் இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படும் என கல்லூரி இயக்குநா் லாசியா தெரிவித்தாா். முகாமில் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சுந்தரவேல், பாா்வதி, ரோட்டரி சங்கத் தலைவா் பாலாஜி, சிப்காட் தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT