கிருஷ்ணகிரி

மலைக் கிராம சாலைகள் ஆய்வு

7th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

 

ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலை மழை காரணமாக சேதமடைந்தது. இச் சாலைகளை முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் ஆய்வு செய்தாா்.

வேப்பனப்பள்ளி ஒன்றியம், நாரலப்பள்ளி ஊராட்சியில் ஏக்கல்நத்தம் என்ற மலைக் கிராமம் உள்ளது. தொடா் மழை காரணமாக இந்த மலை கிராமத்துக்குச் செல்லும் தாா் சாலை சேதமடைந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது சேதமடைந்திருந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தாா்.

ஆய்வின் போது, திமுக ஒன்றியச் செயலாளா் ரகுநாத், ஊராட்சி மன்றத் தலைவா் உமாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT