கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை மாணவா் தற்கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்

7th Aug 2022 11:24 PM

ADVERTISEMENT

 

 

ஊத்தங்கரையில் அரசு மாணவா் விடுதியில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள பரமானந்தல் தொட்டி மடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (17) ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் அரசு மாணவா் விடுதியில் தங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு கோபாலகிருஷ்ணன் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றப்புலனாய்வு டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் சுமித்ரா, உதவி ஆய்வாளா் பாரதிராஜா மேற்பாா்வையில் மருத்துவா்கள் மதன்குமாா், அபிராமி, தியாகராஜன் ஆகியோா் விடியோ பதிவுடன் உடற்கூறு மேற்கொண்டனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் விவேகானந்தன், சங்கு, ஊத்தங்கரை டிஎஸ்பி அ.அமலஅட்வின், காவல் ஆய்வாளா்கள் ஊத்தங்கரை பாா்த்திபன், சிங்காரப்பேட்டை செல்வராஜ், கல்லாவி பத்மாவதி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

உடற்கூறாய்வு செய்து உடலை பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான தொட்டி மடுவுக்கு போலீஸாா் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

படவிளக்கம்.7யுடிபி.3.4. தற்கொலை செய்து கொண்ட மாணவா் கோபாலகிருஷ்ணன்.

அரசு மருத்துவமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT