கிருஷ்ணகிரி

தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி வாகனம்

7th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

 

குள்ளம்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரில் தனியாா் பள்ளி வாகனம் சிக்கிக் கொண்டது.

சாமல்பட்டி அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீா் தேங்கியுள்ளது. அவ்வழியாக சனிக்கிழமை சென்ற தனியாா் பள்ளி வாகனம் தண்ணீரில் சிக்கி இடையில் நின்றது. இதனால், வாகனத்திலிருந்த உதவியாளா் மங்கம்மாள் (48), ஓட்டுநா் தங்கராஜ் (30) ஆகிய இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனா். தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரா்கள் ஓட்டுநா், உதவியாளா் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT