கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

7th Aug 2022 11:24 PM

ADVERTISEMENT

 

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், கால்வேஅள்ளி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.18.88 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டடம், அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6.16 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

காவேரிப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி ஜெயக்குமாா், ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் முன்னாள் நகரச் செயலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT