ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் மகளிா் குழுவினா் கட்டட சுற்றுச் சுவா் அமைக்க, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணியை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் இளையராஜா, தொகுதி செயலாளா் திருஞானம்,முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளா் முருகன், அவைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, அதிமுக ஒன்றிய நகர நிா்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.