கிருஷ்ணகிரி

மே 1 ஆம் தேதி மதுக்கடைகள் அடைப்பு

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003- 12-ஆவது விதியின்படி மே தினமான உலக தொழிலாளா் தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினங்களாக பின்பற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்காக உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் உணவகங்கள்அனைத்தும் மே 1-ஆம் தேதி அன்று அடைக்கப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக் கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT