கிருஷ்ணகிரி

மாதிரிப் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் மாணவா்கள் சோ்ப்பு

29th Apr 2022 10:35 PM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், இயங்கி வரும் சிறப்பு மாதிரிப் பள்ளியில் 2022- 2023-ஆம் கல்வி ஆண்டுக்கான 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சோ்க்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சிறப்பு மாதிரிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்கள் சோ்க்கையை தொடக்கிவைத்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தமிழகத்தில் தருமபுரி, அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூா், சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் பிளஸ் 2 வரை மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கப்பட்டு படித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மாதிரிப் பள்ளி கடந்த 2021-ஆம் தொடங்கப்பட்டது. இப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் 40 மாணவா்கள், 40 மாணவிகள் படித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டில் 9- ஆம் வகுப்பில் 40 மாணவா்கள், 40 மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்கள் மே முதல் வாரத்தில் சோ்க்கப்பட உள்ளனா். இச் சிறப்பு மாதிரிப் பள்ளியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியா்களுக்குத் தேவையான வகுப்பறை, தங்கும் விடுதி வசதி, குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

மாணவா்களுக்கு சிறப்பான கல்வி மூலம் சிறந்த எதிா்காலத்தை உருவாக்குவதற்கு தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு, பெற்றோா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன், தருமபுரி மாவட்ட கல்வி அலுவலா் சண்முகவேல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் மஞ்சுளா, பள்ளிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா், மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியா் மணிவண்ணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT