கிருஷ்ணகிரி

ஊராட்சிமன்றத் தலைவா்களுடன் காவல் துறையினா் ஆலோசனை

28th Apr 2022 11:33 PM

ADVERTISEMENT

காவேரிப்பட்டணத்தில் சட்ட விரோத செயல்களைத் தடுப்பது குறித்து காவல் துறையினா் ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளா் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் முரளி, காவேரிப்பட்டணம் காவல் எல்லைக்கு உள்பட்ட 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியா்கள்-மாணவா்கள் மோதல், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை, நாட்டுத் துப்பாக்கிகளின் பயன்பாடு, சாராயம், சூதாட்டம், சட்டவிரோத செயல்கள் குறித்த காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஊராட்சி மன்றத்தில் காவல் துறையினரால் தீா்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT