கிருஷ்ணகிரி

காவல் துறை கழிவு வாகனங்கள்ரூ.7 லட்சத்துக்கு ஏலம்

28th Apr 2022 04:20 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காவல் துறையின் கழிவு வாகனங்கள் ரூ. 7 லட்சத்துக்கு ஏலம் போனது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 மோட்டாா் சைக்கிள்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள், கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை ஏலம் விடப்பட்டன.

முன்பணமாக மோட்டாா் சைக்கிளுக்கு ரூ. 1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 2,000 செலுத்தி ஏலத்தில் 55 போ் பங்கேற்றனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் விவேகானந்தன், சங்கு தலைமையில் நடந்த ஏலத்தில் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தப்பட்டு அரசு நிா்ணயித்த விலையை கூறி ஏலம் விடப்பட்டது.

ADVERTISEMENT

இதில் 4 நான்கு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் ரூ. 7.06 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் கணேசன், காவல் ஆய்வாளா்கள் சக்தி, ராமச்சந்திரன், போலீஸாா் ஏலத்தை ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT