கிருஷ்ணகிரி

இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்த ஒசூா் அரசுப் பள்ளி மாணவி

28th Apr 2022 04:10 AM

ADVERTISEMENT

 

ஒசூா்: ஒசூா் அரசுப் பள்ளி மாணவி, 20 வயதுக்கு உள்பட்ட இந்திய கைப்பந்து அணியில் இடம் பிடித்துள்ளாா்; அவருக்கு ஒசூா் மேயா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா(17). இவா் பிளஸ் 2 படித்து வருகிறாா். ஒசூா், ஈகிள்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப்பில் கைப்பந்து போட்டிக்கென பயிற்சி பெற்று விளையாடி வருகிறாா்.

மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் இவா் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உறுதியாக இருந்து பள்ளிக்குப் பெருமை சோ்த்தாா். தற்போது இவா், 20 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கைப்பந்து அணியில் இடம் பிடித்துள்ளாா்.

ADVERTISEMENT

ஏசியன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். ஏசியன் கைப்பந்து சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் சமே நகரில் வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு தோ்வானதை அடுத்து வீராங்கனை கோபிகா ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அப்போது எஸ்.ஏ.சத்யா கூறுகையில், ‘பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்க்கும் வகையில் வெற்றிகளை குவித்திட எனது சாா்பில் உதவிகள் செய்து தரப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT