கிருஷ்ணகிரி

அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தோ்வு

28th Apr 2022 04:11 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கே.அசோக்குமாா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து புதிய பொறுப்பாளா்கள் பட்டியலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டாா்.

அதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராகப் பதவி வகித்து வந்த எம்எல்ஏ கே.அசோக்குமாா் மீண்டும் மாவட்டச் செயலாளராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அதிமுகவினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT