கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் எஸ்.எஸ்.ஐ. தற்கொலை

17th Apr 2022 06:04 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜக் கடையை அடுத்துள்ள கல்லக்குறி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராஜ் (49). இவா் கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய இவா், உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த, 15 நாள்களாக சோா்வாகவும், விரக்தியுடனும் காணப்பட்ட அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT