கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

14th Apr 2022 12:32 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரியில் மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மாலதி நாராயணசாமிக்கு பாராட்டு விழா, பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், கல்லூரி செயலருமான வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் த.பாலசுப்பிரமணியன், துணைமுதல்வா் ந. குணசேகரன், கணினி துறைத் தலைவா் தே.கவிதா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மருத்துவா் ந.மாலதி நாராயணசாமி சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் அமானுல்லா, பாபுசிவக்குமாா், சிவன், ஸ்ரீ வித்யா மந்திா் அறக்கட்டளை உறுப்பினா் குணசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக இயற்பியல் துறைத் தலைவா் இரா.அறிவுச் செல்வி வரவேற்றாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை வீ.செந்தமிழ் தொகுத்து வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் சி.கோமதி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT