கிருஷ்ணகிரி

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

14th Apr 2022 12:31 AM

ADVERTISEMENT

குறைந்த விலையில் ஐபோன் வழங்குவதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரைச் சோ்ந்தவா் கெளதம் (30). இவா், தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 8-ஆம் தேதி, விடுமுறைக்கு ஊருக்கு வந்தவா், ஆப்பிள் ஐபோன் குறைந்த விலைக்கு தருவதாக வெளியான விளம்பரத்தை நம்பி, மா்ம நபா் அளித்த, 5 வங்கி கணக்குகளில் ரூ. 2.06 லட்சத்தை செலுத்தியுள்ளாா்.

பின்னா், அந்த மா்ம நபரை அவரது கைப்பேசி எண்ணில் தொா்பு கொள்ளமுயன்றபோது, முடியவில்லை. அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கெளதம், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT