கிருஷ்ணகிரி

அரசு ஊழியரிடம் ரூ. 87,000 மோசடி

14th Apr 2022 12:31 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியரிடம் ரூ. 87,000- ம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் விண்ணரசு (33). இவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த, 9-ஆம் தேதி பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது. மேலும் சிறிதளவு பணம் முதலீடு செய்தால், கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டதை நம்பி, அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணை தொடா்புகொண்ட விண்ணரசு, அவா்கள் அனுப்பிய இணையதள முகவரியில் தன் விவரங்களைப் பதிவிட்டதுடன், ரூ. 87,185 பணமும் அனுப்பியுள்ளாா். ஆனால் கூடுதல் தொகையும் கிடைக்கவில்லை, செலுத்திய பணத்தையும் திரும்பப் பெற முடியவில்லை. மேலும், அந்த இணையதள முகவரியும் முடக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விண்ணரசு அண்மையில் அளித்த புகாரின்படி கிருஷ்ணகிரி சைபா்கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT