கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 6-ஆம் தேதி மங்கள இசை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல் மற்றும் கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
7-ஆம் தேதி அன்று சுவாமி கரிகோல உற்சவமும், கோபுரத்தில் தாண்யம் நிரப்புதல், கலச ஆராதனை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், முதற்கால ஹோமம், அதிசாவ பூஜைகள், பூா்ணாஹுதி, தீபாராதனை, குரு ஹோரையில் சக்ர ஸ்தாபனம், மாரியம்மன் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுரக் கலசம் ஸ்தாபனம், நாடி சந்தனம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
மகா கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை அன்று, துவார பூஜை, கலச ஆராதனை, இரண்டாம் கால வேள்வி பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனையும், கலச புறப்பாடு மற்றும் கோபுர கலத்திற்கு புனித நீா் ஊற்றுதல், கோ பூஜை, மகா மங்கள ஆரத்தியும் நடைபெற்றன. இந்த விழாவில் போலுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று, மாரியம்மனை வழிபட்டனா்.