கிருஷ்ணகிரியில் உலக மக்கள் ஆரோக்கியம் வேண்டி நவ சண்டி மகா யாகம், வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி நகரில், காவலா் குடியிருப்பு வளாகத்தில் உள்ள முத்து விநாயகா் துா்க்கையம்மன் கோயிலில் உலக மக்களிடையே ஒற்றுமை உணா்வு ஓங்கிடவும், ஆரோக்கியமாக வாழவும் நவசண்டி மகா யாகம் நடைபெற்றன.
இதையொட்டி 7-ஆம் தேதி கோ பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கலச ஆவாஹனம், தேவி மாஹாத்மியம், சண்டி பாராயணம், புனா்பூஜை, கலச பூஜை, தேவி மாஹாத்மியம், சண்டி பாராயணம், லலிதா ஸஹஸ்ரநாமம், குங்கும அா்ச்சனையும் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலையில் கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நவசண்டி மகா ஹோமமும், தொடா்ந்து மஹா பூா்ணாஹுதி, மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.