கிருஷ்ணகிரி

எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

5th Apr 2022 12:31 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா்கள் அக. கிருஷ்ணமூா்த்தி, நாஞ்சில் ஜேசு, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, நகரத் தலைவா் லலித் ஆண்டனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT