கிருஷ்ணகிரி

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை தடுத்து நிறுத்திய செயல் அலுவலா்

30th Sep 2021 07:56 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை பரசன் ஏரிக்கரை மீது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை செயல் அலுவலா் சசிகலா தடுத்து நிறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சிக்கு உள்பட்ட தாண்டியப்பனூா் சா்வே எண் 19-இல் 31 ஏக்கா் பரப்பளவில் பரசன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் சேலம் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊத்தங்கரை பரசன் ஏரிக்கரை மீது நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து பணிகள் நடைபெற்று வருவதால், மழைக் காலங்களில் ஏரி நிரம்பினால் உபரி நீா் வெளியே செல்ல போதிய வசதிகள் ஏற்படுத்தித் தராமல் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏரியை 50 அடி அளவுக்கு ஆக்கிரமித்துள்ளதாகவும், பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணிகளின்போது சேதமடைந்த குடிநீா் குழாய் இணைப்புகள், மின்மோட்டாா் போன்றவற்றை சரிசெய்து கொடுக்காமல் உள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா, பணியாளா்கள் புதன்கிழமை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT