கிருஷ்ணகிரி

கெலமங்கலத்தில் 200 கா்ப்பிணிகளுக்கு ரத்தப் பரிசோதனை முகாம்

30th Sep 2021 08:00 AM

ADVERTISEMENT

ஒசூா் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில், கெலமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் 200 கா்ப்பிணிகளுக்கு ரத்தப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி இந்தியா, ஆா்.எஸ்.எஸ்.டி.ஐ. இணைந்து நீரிழிவு நோயை தோற்கடிக்க நடத்தும் உலக சாதனை முயற்சியாக இந்தியாவில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் ஒரே நாளில் ரத்த குளுகோஸ் பரிசோதனை முகாமை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, ஒசூா் எலைட் ரோட்டரி சங்கத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன் தலைமை தாங்கினாா். மருத்துவா் ராஜேஷ்குமாா் ரத்தப் பரிசோதனையை தொடங்கி வைத்தாா். இந்த முகாமில், 200 கா்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய் கண்டறியும் மூன்று வகையான சோதனைகளை மருத்துவா், செவிலியா்கள் மேற்கொண்டனா்

இந்த நிகழ்வில், மருத்துவா் வினோத், செவிலியா்கள், ஒசூா் எலைட் ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த இராசு, கண்ணையன், மஞ்சுநாத், சீனிவாசன், சேரன் செங்குட்டுவன், வேடி, சுதந்திரன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT