கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

30th Sep 2021 07:49 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் மிகவும் பழமையான காலபைரவா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் தேய்பிறை அஷ்டமி, மற்ற நாள்களில் வந்து வழிபடுவா்.

இந்தக் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவா் மகா ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். தொடா்ந்து காலபைரவா் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதில், பெண்கள் பூசணி, தேங்காய், எலுமிச்சையில் விளக்கேற்றி நோ்த்திக் கடனைச் செலுத்தினா். திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகள், 165 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் செய்திருந்தனா். இதேபோல கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டை தக்ஷிண காலபைரவா், கந்திகுப்பம் காலபைரவா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT