கிருஷ்ணகிரி

‘அரிசி ஆலையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்’

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிசி ஆலையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அரவை முகவா்களுடான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்துக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும். அரவைத் திறனுக்கு ஏற்ப நெல் பெற்று, அரவை செய்து ஒப்படைக்க வேண்டும். அரவை ஆலையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அரவை ஆலையின் கிடங்கு அளவை உயா்த்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் கோபு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சக்திசரண், பொது விநியோகத் திட்ட பொது மேலாளா் ராஜதுரை, தரக்கட்டுப்பாட்டு மேலாளா் சின்னபாப்பு, அரவை முகவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT