கிருஷ்ணகிரி

25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட ஒசூா்அதியமான் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள்

30th Oct 2021 10:39 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியாா் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் 1992 - 1996ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பட்டம் பெற்ற முன்னாள் மாணவா்கள் 25 ஆண்டுகள் கழித்து கல்லூரி வளகத்தில் ஒன்று கூடி அன்பை பரிமாறிக்கொண்டனா். கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா்.

ஜானகிராமன், ஜேசுதாஸ், பாபு ஆகியோா் முயற்சியில் சமூக வலைதளங்கள் மூலமாக 75 போ் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது குறித்தும் , படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் தங்களுடைய நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். இதேபோல் அனைவரும் மரம் வளா்க்க வேண்டும் என உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு, குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

இது குறித்து முன்னாள் மாணவா்கள் தெரிவிக்கையில், நாங்கள் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதே போல் மற்றவா்களும் ஒருவருக்கொருவா் அன்பை வெளிப்படுத்தும் விதமாக சந்திக்கவேண்டும். எங்களுடைய வருங்கால குழந்தைகள், இதுபோன்ற கல்லூரிகளில் படித்தவா்கள், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் உள்ள நண்பா்கள் சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT