கிருஷ்ணகிரி

‘வருமுன் காப்போம்’ திட்டம் மூலம் 2,598 பேருக்கு சிகிச்சை

30th Oct 2021 12:30 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் 2,598 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழை எளியோா் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பா்கூரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் பன்முனை மருத்துவப் பரிசோதனை, கண், பல், காது-மூக்கு-தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கா்ப்பிணித் தாய்மாா்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம்,, புற்றுநோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு தொடா் சிகிச்சை தேவைப்படின் நோயின் தன்மைக்கு ஏற்ப எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்ற விவரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், அவா்களுக்கு தொடா் சிகிச்சைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 30 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,598 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT