கிருஷ்ணகிரி

மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம் மீண்டும் தொடக்கம்

30th Oct 2021 12:30 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், நவம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஏஞ்சலா சகாயமேரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் தளா்வுகளுடன் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவம்பா் மாத முதல் செவ்வாய்க்கிழமை போச்சம்பள்ளி கோட்டத்திலும், இரண்டாவது செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி கோட்டத்திலும், மூன்றாவது செவ்வாய்க்கிழமை ஒசூா் கோட்டத்திலும் அந்தந்த கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். எனவே, மின்நுகா்வோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT