கிருஷ்ணகிரி

மக்காச்சோள பயிரில் படைப்புழு மேலாண்மை செயல்விளக்கம்

30th Oct 2021 10:52 PM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அருகே மக்காச்சோள பயிரில் படைப்புழு மேலாண்மை செயல்விளக்கம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த, எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, புதிய வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில், முதன்மைச் செயல்விளக்கத் திடல்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை முதன்மைச் செயல் விளக்கத் திட்டம் ஊத்தங்கரை வட்டம், வலத்தானூா் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் 10 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், முதன்மைச் செயல்விளக்கத் திடலின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தாா். மேலும் முதன்மைச் செயல்விளக்கத்தில் பின்பற்றப்படும் படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்களை விளக்கிக் கூறினாா். ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் தாமோதரன், வேளாண்மைத் துறையின் திட்டங்களையும், செயல்விளக்கத் திடலில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள்களாக மெட்டாரைசம் அனிசோபில்லே, அசாடிரேகடின் மற்றும் தட்டைப்பயறு விதைகளை வழங்கினா்.

வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனா் செந்தில்குமாா் (வேளாண் விரிவாக்கம்) மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT