கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ ஆய்வு

30th Oct 2021 10:42 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், ஆய்வுப் பணியை சனிக்கிழமை மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சிகுட்பட்ட 23, 24, 25 வாா்டுகளில் அவா் ஆய்வு மேற்கொண்ட போது, கழிவுநீா்க் கால்வாய் தூா் வாருதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனா். அந்தந்த துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா்களுக்கு அசோக்குமாா் எம்எல்ஏ உறுதியளித்தாா். அதிமுக நகர செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT