கிருஷ்ணகிரி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

25th Oct 2021 12:58 AM

ADVERTISEMENT

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 7-ஆவது மாவட்ட மாநாடு, அதன் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளா் கல்யாணசுந்தரம் , செயலாளா் நடராஜன், பொருளாளா் தேவராஜ், மாநிலத் தலைவா் அன்பரசு, உதவி செயலாளா் பாபு, துணைத் தலைவா் பழனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 1.4.2003-க்கு பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா், ஆசிரியா் அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளா், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளா்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

கரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, விடுப்பு சரண் உள்ளிட்டவற்றை பாதிப்பின்றி உடனே வழங்க வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கிருஷ்ணகிரி நகா், கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளின் நலன் கருதி அனைவருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

புதிய நிா்வாகிகளாக மாவட்டத் தலைவா் சந்திரன், துணைத் தலைவா்கள் ராமசந்திரன், முரளி, ஜெயலட்சுமி, சப்தமோகன், செயலாளராக நடராஜன், இணைச் செயலாளா்களாக கல்யாணசுந்தரம், கோவிந்தராஜ், ஜெகதாம்பிகா, மஞ்சுளா, பொருளாளராக தேவராஜ், தணிக்கையாளா்களாக மணி, முருகேசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT