கிருஷ்ணகிரி

அஞ்சல் அலுவலங்களிலும் அக்.29 வரை தங்கப்பத்திரம் விற்பனை

25th Oct 2021 12:56 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையையொட்டி அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் 25 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தங்கப்பத்திரம் விற்பனை செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் தீபாவளியையொட்டி அக். 29-ஆம் தேதி வரையில் தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவா் ஒரு கிராம் முதல் நான்காயிரம் கிராம் வரை தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.

ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 4,761 மட்டுமே. தங்கப்பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகளாகும். இதன் இறுதி தேதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பிற்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

அதே வேளையில், தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசா்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளா்களின் கணக்கில் சோ்க்கப்படும்.

இது முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய். மேலும், பணம் செலுத்தும் நபா்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாள்களுக்கு பிறகு தங்கப்பத்திரமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர ஆதாா் எண், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவை மிகவும் அவசியமாகும். தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT