கிருஷ்ணகிரி

ஒசூரில் ‘வருமுன் காப்போம்’ திட்டம் தொடக்கம்

23rd Oct 2021 04:13 AM

ADVERTISEMENT

ஒசூரை அடுத்த நல்லூரில் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஒசூா் ஒன்றியம், நல்லூா் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை திமுக மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தொடக்கிவைத்து பேசியதாவது:

தமிழக சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் வீடுகளுக்கே சென்று மருந்து பெட்டகங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி 21 வகையான நோய்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் சுகாதாரமான வாழ்வை மக்கள் பெற வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம் என்றாா்.

ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா, திமுக ஒன்றியச் செயலாளா் சின்னபில்லப்பா, ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தா வீரபத்திரப்பா, முதன்மைக் கல்வி அலுவலா், மருத்துவா்கள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா். ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சந்திரசேகரா மருத்துவமனை இணைந்து மருத்துவ சேவை அளித்தன.

ADVERTISEMENT

 

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT