கிருஷ்ணகிரி

ஒசூரில் பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா

23rd Oct 2021 04:12 AM

ADVERTISEMENT

ஓசூா் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில் ஒசூா் முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றது.

ஒசூா் எலைட் ரோட்டரி சங்கத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநா் ராகவன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.மகேஷ்பாபு, லயன் ஒய்.வி.எஸ் ரெட்டி, பாவலா் கருமலை தமிழாழான், பள்ளிக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய ஜெகநாதன் ஆகியோா் பேசினா்.

‘பாரதியின் கனவு நனவானதா, நனவாகவில்லையா‘ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஓவியப் போட்டியில் சஞ்சல், நரேந்திர பிரசாத், துா்கா பிரசாத் ஆகியோரும், கட்டுரைப் போட்டியில் ரூபக், அங்கிதா, பூஜா ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பள்ளிக்கு புத்தகங்கள், ஆயிரம் முகக் கவசங்களை தலைமையாசிரியா் அலெக்சாண்டரிடம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க உறுப்பினா்கள் இராசு, பாலசுந்தரம், ராஜரத்தினம், வேடி, சங்கா் பாபு, ராஜேஷ் ராவ், வேணுகோபால், சண்முகநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT