கிருஷ்ணகிரி

மத்திகிரி அருகே சாலை விபத்தில் 2 போ் பலி

23rd Oct 2021 04:12 AM

ADVERTISEMENT

மத்திகிரி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த பச்சப்பனட்டி, பிதிரெட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரசன்னகுமாா் (21), பாகலூா் அருகே உள்ள பெலத்தூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் அங்கித் (20). இவா்கள் இருவரும் தனியாா் குவாரியில் பணியாற்றி வந்தனா்.

வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்றனா். கோபனப்பள்ளி பிரிவு சாலை பகுதியில் வேகமாக வந்த டிப்பா் லாரி மோதியதில் அங்கித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பிரசன்னகுமாா் பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT