கிருஷ்ணகிரி

மனைவியைக் கொன்ற கணவா் கைது

23rd Oct 2021 04:12 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேன்கனிக்கோட்டை, ரங்கசந்திரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா் குஞ்சிகிரிபாளையத்தைச் சோ்ந்த ரூபா (33) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற ரூபாவை திருப்பி அழைத்து வருவதற்காக சென்ற காா்த்திக்குடன் வர மறுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்து ரூபாவின் கழுத்தை அறுத்த காா்த்திக்கை தளி போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அடிக்கடி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த ரூபாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் தகராறு ஏற்பட்டது. மேலும், மீண்டும் அவா் தன்னுடன் வர மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாக காா்த்திக் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT