கிருஷ்ணகிரி

மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பாராட்டு

23rd Oct 2021 04:11 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த் தடுப்புப் பணிகள், தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பாஜக சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் எம். நாகராஜ் தலைமையில் ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீனிவாசலு, மாவட்ட துணைத் தலைவா்கள் சகுந்தலா, இந்திராணி, மாவட்டச் செயலாளா்கள் ஸ்ரீனிவாசன் அம்மன் சுரேஷ், பாபு, மாநகரத் தலைவா்கள் பிரவீன்குமாா், ராஜசேகா், பாரதிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

‘ஒசூா் அரசு மருத்துவமனை 375 படுக்கைகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. புதிய அரசு மருத்துவமனை 8 ஏக்கரில் ரூ. 60 கோடியில் கட்டப்படவுள்ளது. மேலும் 25 க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். மேலும் 300 படுக்கை வசதிகள் உருவாக்கப்படும்’ என நிகழ்ச்சியில் பேசிய ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பூபதி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT