கிருஷ்ணகிரி

மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் பலி

23rd Oct 2021 04:11 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் (30), பா்கூா், குருவிநாயனப்பள்ளியை அடுத்த பசவண்ணகோயில் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திர ராவ் (57) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனா்.

சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியதில் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT