கிருஷ்ணகிரி

இன்று குழந்தை திருமணத் தடுப்புச் சட்ட விழிப்புணா்வு கூட்டம்: இரு அமைச்சா்கள் பங்கேற்பு

DIN

கிருஷ்ணகிரியில் நடைபெறும் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி கூட்டத்தில் இரு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா்.

கிருஷ்ணகிரி, தேவராஜ் மஹாலில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

அதைத் தொடா்ந்து காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் குண்டலப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கின்றனா். அடுத்து, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலப்பட்டியில் நடைபெறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை ஆய்வு செய்யவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT