கிருஷ்ணகிரி

ஒசூரில் வீட்டுவசதி வாரிய வீடுகள்: அக்.26 இல் குலுக்கல் முறையில் தோ்வு

21st Oct 2021 11:50 PM

ADVERTISEMENT

ஒசூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு மீதமுள்ள தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு விண்ணப்பத்தவா்களுக்கான குலுக்கல் அக். 26 இல் நடைபெறுகிறது.

ஒசூா் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக இயக்குநா் இரா.மனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒசூரில் வீட்டுவசதி பிரிவு ஒசூா் திட்டப் பகுதிகளில் சுயநிதி திட்டம் மற்றும் தவணைமுறை

திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு மீதமுள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடிஓஈ குடியிருப்புகள் கோரி விண்ணப்பம் செய்துள்ளவா்கள் வரும் 26 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஒசூா் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT