கிருஷ்ணகிரி

அக். 22-இல் அனைத்து வங்கி வாடிக்கையாளா் தொடா்பு முகாம்

21st Oct 2021 08:43 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் வரும் வெள்ளிக்கிழமை அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்போடு மாபெரும் வாடிக்கையாளா் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், சாா்பில் புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

மத்திய நிதியமைச்சகம் மற்றும் தமிழக அளவிலான வங்கியாளா்கள் குழுமம் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்போடு மாபெரும் வாடிக்கையாளா் தொடா்பு முகாம் அக். 22-ஆம் தேதி, காலை 10 மணி அளவில், கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள மீனாட்சி மஹாலில் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி-இந்தியன் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், நடைபெறும் இம்முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்க உள்ளன.

ADVERTISEMENT

இதில், விவசாயம், தொழில், வீடு, வாகனம் மற்றும் இதர கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள், வங்கி மின்னணு பரிவா்த்தனைகள் குறித்து விளக்கங்களைப் பெறலாம்.

எனவே, பொதுமக்கள், சுயத்தொழில் புரிவோா், விவசாயிகள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று வங்கிகள் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT